ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: போர்ச்சுகல் – துருக்கி அணிகள் இன்று மோதல்

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுகல் – துருக்கி அணிகள் மோத உள்ளன.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில்,இந்த தொடரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜார்ஜியா- செக்குடியரசு அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகல் – துருக்கி அணிகள் மோத உள்ளன.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம்- ருமேனியா அணிகள் மோதுகின்றன..

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்