ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பெல்ஜியம் – உக்ரைன் அணிகள் இன்று மோதல்

இன்று இரவு 9.30 மணிக்கு 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 9.30 மணிக்கு 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, ஒரு ஆட்டத்தில் சுலோவாக்கியா – ரொமேனியா அணிகள் மோதுகின்ற்ன. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் – உக்ரைன் அணிகள் மோதுகின்றன.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் போர்ச்சுகல் – ஜார்ஜியா அணிகள் மோதுகின்றன.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி