ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ஸ்பெயின் அணி சாம்பியன்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் மோதின.

பெர்லின்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் கடந்த மாதம் (ஜூன்) 14-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.

ஸ்பெயின் தரப்பில் நிகோ வில்லியம்ஸ் மற்றும் மைக்கேல் ஒயர்சபால் தலா 1 கோல் அடித்தனர். ஆனால் இங்கிலாந்து தரப்பில் கோல் பால்மர் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

Spain win it right at the last #EURO2024 | #ESPENGpic.twitter.com/5FIuNCrncq

— UEFA EURO 2024 (@EURO2024) July 14, 2024

Related posts

அஸ்வின் அபார பந்துவீச்சு; வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அதிக சதம் அடிப்பார் – வங்காளதேச முன்னாள் கேப்டன்

டெஸ்ட் கிரிக்கெட்; அனில் கும்ப்ளேவின் தனித்துவமான சாதனையை உடைத்த அஸ்வின்