ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; போலந்து – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் சுலோவீனியா – டென்மார்க், செர்பியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

ஹாம்பர்க்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இன்று மாலை 6.30 மணிக்கு ஹாம்பர்க்கில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெறும் ஒரு லீக் ஆட்டத்தில் போலந்து – நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இரவு 9.30 மணிக்கு ஸ்டட்கார்ட்டில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் சுலோவீனியா – டென்மார்க் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை 00.30 மணி) நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் செர்பியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா