ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஐதராபாத் அணிகள் மோதின.

கொச்சி,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் சார்பில் ஜீசஸ் ஜிமெனெஸ் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஐதராபாத் அணி சார்பில் ஆண்ட்ரி ஆல்பா 43 மற்றும் 70-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related posts

2008 Malegaon Blast Case: Pragya Singh Thakur Posts Pic Of Swollen Face After NIA Court Issues Warrant

Maharashtra Elections 2024: Ajit Pawar Supports Nawab Malik’s Candidacy At Mankhurd Rally, Defends Against BJP Opposition; VIDEO

Maharashtra Elections 2024: Uddhav Thackeray Unveils Shiv Sena (UBT) Manifesto, Promises To Scrap Dharavi Redevelopment And Extend Free Education Scheme