ஐ.டி ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்யும் வகையில் மசோதா

ஐ.டி ஊழியர்கள் 12 மணி நேரம் வேலை செய்யும் வகையில் மசோதா.. அதிரடி காட்டும் மாநில அரசு

கோப்புப்படம்

கர்நாடகாவில் நாள்தோறும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்ற வகை செய்யும் மசோதாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் கடைகள் மற்றும் வணிக அமைப்புகள் சட்டம் 1961-ல் அண்மையில் மாநில அரசு திருத்தம் மேற்கொள்ள முயற்சித்தது. அந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக பணியாளர்கள் வேலை செய்ய முடியும்.

இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால், ஒரு நாளைக்கு ஐடி பணியாளர்கள் 14 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதி அளிக்கப்படும் என்பதால், ஐடி பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
குஜராத்தில் ஒரே மையத்தில் 85% தேர்ச்சி… சந்தேகத்தை கிளப்பும் நீட் தேர்வு முடிவுகள்!

பழைய சட்டத்தின்படி ஒரு நாளில் 3 ஷிஃப்ட்களில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் புதிய சட்ட திருத்தம் கொண்டுவந்தால், ஒரு நாளில் இரண்டு ஷிஃப்டுகள் மட்டுமே இருக்கும் என்றும் இதனால் ஒரு ஷிஃப்ட் குறைந்து, பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிக நேரம் பணியாற்றுவதால் உற்பத்தி திறன் குறையும் என்றும் கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய சட்டத் திருத்தத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரியுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
IT JOBS
,
Karnataka

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்