ஒகேனக்கலுக்கு நீா் வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளும் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கா்நாடக வனப்பகுதி மற்றும் தமிழக காவிரி நீா் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும்!

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி ,ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது.

இரண்டு மாநில காவிரி நீா் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவாதல் ஒகேனக்கல்லுக்கு மேலும் நீா்வரத்து அதிகரிக்க கூடும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீா் வளத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது