ஒகேனக்கல்லில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 6,300 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை அளவீட்டின்போது காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,712 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,917 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 107.32 அடியாகவும், நீர் இருப்பு 74.65 டிஎம்சியாகவும் இருந்தது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்