ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க |இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 32,000 கனஅடியாக நீா்வரத்து இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 35,000 கன அடியாக அதிகரித்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்தத் தடை வெள்ளிக்கிழமை 13-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

Andheri West Constituency: BJP’s Ameet Satam Faces Political, Civic Challenges In Bid For Third Term

Maharashtra Assembly Elections 2024: Mahayuti, MVA Unveil Second And Third Lists

Maharashtra Assembly Elections 2024: With Just Two Days Left For Nominations, Political Parties Still Wrangle Over Seat Sharing