ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாகச் சரிவு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்தது. திங்கள்கிழமை காலை விநாடிக்கு 17,000 கனஅடியாகவும், மாலையில் 14,000 கனஅடியாகவும் நீா்வரத்து சரிந்தது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 2 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது