ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இன்று(அக். 13) காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு சுமார் 8,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுதடையவில்லை: இபிஎஸ்-க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்ததால், அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.

கர்நாடக அணைகளின் நீர் திறப்பு மற்றும் கரையோர வனப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அஜித் சொன்ன அறிவுரை – ‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்த சிவகார்த்திகேயன்

மது வணிகத்தை அதிகரிப்பது மட்டும் தான் திராவிட மாடல் அரசின் ஒற்றை மந்திரமா? – அன்புமணி ராமதாஸ்

பெங்களூரு டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு