ஒடிசா புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு… நாளை பதவியேற்பு விழா

ஒடிசாவில் முதன் முறையாக அமையும் பாஜக ஆட்சி… முதல்வராக மோகன் மாஜி தேர்வு!

மோகன் சரண் மாஜி

ஓடிசா மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சியமைக்கும் நிலையில், முதலமைச்சராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகினார்.

விளம்பரம்

இந்நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் 4 முறை பாஜக எம்.எல்.ஏ.வான மோகன் மாஜி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 52 வயதான மோகன் மாஜி கியோன்ஜார் தொகுதியில் 87,000 வாக்கு வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜியை தோற்கடித்தார்.

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தின்போது முதல்வரை தேர்வு செய்யும் நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்திர யாதவ் ஆகியோருடன் அஷ்வினி வைஷ்ணவ், ஜுவால் ஓரம் ஆகியோரும் மேலிட பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

விளம்பரம்இதையும் படிங்க – இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவன உயர்பதவிகளில் பெண்கள் இவ்வளவு தானா? அதிர்ச்சி ரிப்போர்ட்

புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – Modi 3.0 | மத்திய அமைச்சரவை இலாகா அறிவிப்பு.. யார் யாருக்கு எந்த இலாகா?

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Loksabha
,
Odisha

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்