ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஸ் கோயல்

நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால் ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி, பியூஷ் கோயல் தெரிவித்தார். தற்போது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது மற்றும் நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்து வருகிறது

இதனால் முதலீட்டுக்கு மிகவும் உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் சிஸ்கோ தலைவர் ஜான் சேம்பர்ஸ் தன்னிடம் முதலீட்டுக்காக 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்ளதாகவும், அந்த முதலீட்டு இந்தியாவை விட வேறு சிறந்த இடம் இல்லை என்றார்.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!