ஒன்றிணைந்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்! கார்கே அழைப்பு

ஒன்றிணைந்து ஜம்மு – காஷ்மீரின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைவரும் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்துங்கள்: பிரதமர் மோடி!

ஜம்மு – காஷ்மீர் தேர்தல் குறித்து கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, உண்மையான வளர்ச்சி மற்றும் முழு மாநில அந்தஸ்து பெற்று புதிய சகாப்தத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளனர்.

முதல் கட்டமாக 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு வாக்கும், எதிர்காலத்தை வடிவமைத்து, அமைதியை ஏற்படுத்தி, நிலைத்தன்மை, முன்னேற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கான சக்தியை கொண்டுள்ளது.

இந்த முக்கியமான தேர்தலில் வாக்களித்து மாற்றத்துக்கான காரணமாக இருக்க வேண்டும் என்று குறிப்பாக முதல்முறை வாக்காளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

முதல்முறையாக மாநிலத்தின் அந்தஸ்து யூனியன் பிரதேசமாக தரம் குறைக்கப்பட்டதற்கு யார் காரணம் என்பதை வாக்களிப்பதற்கு முன்பு நினைவில் கொள்ளுங்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து ஜம்மு – காஷ்மீரின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The people of Jammu and Kashmir are eager to safeguard their rights and embark on a new era of true development and full statehood. As the first phase of voting in 24 Assembly constituencies commences, we urge everyone to exercise their democratic right and vote in large numbers.…

— Mallikarjun Kharge (@kharge) September 18, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!