ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்சியான வெற்றி: ஆஸி.யின் ஆதிக்கம் நிறுத்தம்! பட்டியலில் இல்லாத இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றியைப் பதிவு செய்தது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

சதம் விளாசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நான்காவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இத்துடன் ஆஸ்திரேலியாவின் தொடர்சியாக 14 முறை வெற்றி என்ற ஆதிக்கத்துக்கும் இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்சியான வெற்றி பெற்ற அணிகளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கிறது. 2ஆவது இடத்திலும் ஆஸி. அணிதான் இருக்கிறது. முதல் 5 இடங்களில் இந்திய அணி இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.

தொடர்சியான வெற்றி பெற்ற அணிகள்

1. ஆஸ்திரேலியா – 21 வெற்றிகள் (2003)

2. ஆஸ்திரேலியா – 14 வெற்றிகள் (2023-2024)

3. இலங்கை – 13 வெற்றிகள் (2023)

4. தென்னாப்பிரிக்கா – 12 வெற்றிகள் (2005)

5. பாகிஸ்தான் – 12 வெற்றிகள் (2007-2008)

View this post on Instagram

A post shared by ICC (@icc)

Related posts

திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் சில வரிகளில்……