ஒருநாள் போட்டிகளில் அடில் ரஷித் புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்று வருகிறது.

எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்!

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 74 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 60 ரன்களும் குவித்தனர்.

200 விக்கெட்டுகள்

இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஜேக்கோப் பெத்தெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஆலி ஸ்டோன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

2️⃣0️⃣0️⃣ ODI WICKETS
And incredible effort, Rash pic.twitter.com/qetuJZj36q

— England Cricket (@englandcricket) September 21, 2024

இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், அடில் ரஷித் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்த ஷுப்மன் கில்!

அடில் ரஷித்துக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டேரன் காஹ் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து