ஒரு செ.மீ. தூரத்தில் தங்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா!

டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் ஒரு செ.மீ. தூரத்தில் தங்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

உலகளவில் மதிப்புமிக்க தடகள விளையாட்டுத் தொடராக திகழும் டைமண்ட் லீக் தொடர், பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸ் நகரில் செப். 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டி சனிக்கிழமையில் நடந்தது.

இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இருப்பினும், இந்த போட்டியில் கரீபிய தீவு நாடான கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீட்டர் தூரம் வீசியதன்மூலம் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆனால், நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே எறிந்ததால், துரதிர்ஷ்டவசமாக, வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்க நேர்ந்தது.

அபிமன்யு ஈஸ்வரன் அதிரடி சதம் 143: இந்தியா சி 216 ரன்கள் முன்னிலை

ஆண்டர்சனைவிட வெறும் ஒரு சென்டி மீட்டரே குறைவாக வீசியதால், நீரஜ் தங்கப் பதக்கத்தை இழக்க நேரிட்டது என்பதுதான் வருத்தம். மேலும், ஜெர்மனியின் ஜூலியன் வெப் 85.87 மீ வீசியதால், மூன்றாவது இடத்தை பிடித்தார்.

நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்கு 12,000 டாலர் பெற்றார். முதல்முறையாக டைமண்ட் கோப்பையை வென்ற ஆண்டர்சனுக்கு 30,000 டாலர் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கான வைல்டு கார்டு வழங்கப்பட்டது.

கடந்தாண்டு நடைபெற்ற டைமண்ட் லீக்கிலும், நீரஜ் சோப்ரா இரண்டாவது இடமே பெற்றிருந்தார்.

புரூசல்ஸ் நகரில் போட்டியின்போது, 10 முதல் 13 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவியது. இருப்பினும் அதை பொருள்படுத்தாமல் விளையாடிய நீரஜ் சோப்ரா, கடந்தாண்டைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அதுமட்டுமின்றி, நீரஜ் சோப்ரா காலிலும், இடுப்பிலும் உள்காயத்துடன் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளார். நீரஜ் சோப்ராவின் காலில் காயம் இருக்கும் நிலையில், அவர் அடுத்து அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்