ஒரே நாளில் 77 லட்சம் பயணிகள்… ரெக்கார்ட் செய்த டெல்லி மெட்ரோ!

ஒரே நாளில் 77 லட்சம் பயணிகள்… ரெக்கார்ட் பிரேக்கிங் செய்த டெல்லி மெட்ரோ!

தலைநகரில் இருக்கும் டெல்லி மெட்ரோவில் ஒரு நாளில் அதிக பயணிகள் பயணம் செய்த சாதனை மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளது.

அர்பன் டிரான்ஸ்போர்ட்டரான டெல்லி மெட்ரோ சமீபத்தில் தனது X அக்கவுண்ட்டில் ஷேர் செய்துள்ள போஸ்ட்டில் இது தொடர்பான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 13 அன்று தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் செய்த சாதனையை தற்போது டெல்லி மெட்ரோ மீண்டும் முறியடித்துள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.

DMRC அளித்துள்ள தரவுகளின் படி, முன்னதாக கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று அதிகபட்சமாக 72.38 லட்சம் பயணிகள் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர், இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று மொத்தம் 77,48,838 பயணிகள் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். இதனால் டெல்லி மெட்ரோவின் தினசரி பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
மூழ்கிய வீடுகள்.. தவிக்கும் மக்கள்.. ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு!

அதே நேரம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதின்று 71.09 லட்சம் பயணிகளும், ஆகஸ்ட் 12 அன்று 71.07 லட்சம் பயணிகளும், செப்டம்பர் 4, 2023 அன்று 71.04 லட்சம் பயணிகளும், பிப்ரவரி 12 அன்று 70.88 லட்சம் பயணிகளும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் பயணித்துள்ளதாக DMRC-ன் தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

தினசரி பயணிகளின் பயணங்களின் எண்ணிக்கை, அல்லது லைன் யுட்டிலிசேஷன் என்பது, பயணிகள் தங்கள் இலக்குகளை அடைய பயணிக்கும் corridors-களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் தற்போதைய நெட்வொர்க்கானது 2,888 ஸ்டேஷன்களுடன் கிட்டத்தட்ட 393 கி.மீ தொலைவை கொண்டிருக்கிறது. இதில் நொய்டா – கிரேட்டர் நொய்டா காரிடார் மற்றும் ரேபிட் மெட்ரோ, குருகிராம் அடக்கம். பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கூடுதல் ரயில்களும் சேவையில் சேர்க்கப்பட்டு, பயணிகள் இயக்கம் வசதியாக நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், தினசரி பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு டெல்லி மெட்ரோவில் அதிகரித்திருக்கிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஹரியானா தேர்தல் தேதி அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி மெட்ரோவின் தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இந்த மாதத்தில் மூன்றாவது முறையாகவும், இந்த ஆண்டில் நான்காவது முறையாகவும் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத வகையில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் 20 அன்று பதிவாகி இருக்கும் நிலையில், நகர்ப்புற போக்குவரத்தில் டெல்லி மெட்ரோவின் அர்ப்பணிப்பு மற்றும் முக்கிய பங்கை இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
delhi
,
Metro Rail
,
Metro Train

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து