ஒரே விலையில் பெட்ரோல், டீசல் – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை,

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் கனகராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பெட்ரோல், டீசலை ஐ.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை கணிசமாக குறையும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பில் சேர்க்கும் கோரிக்கையை பரிசீலிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுப்படி என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளது.

LIVE : ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு https://t.co/daYSdN1Upo

— Thanthi TV (@ThanthiTV) September 11, 2024

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்