ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: இந்திய வீரர் சச்சின் சிவாச் கால்இறுதிக்கு முன்னேற்றம்

57 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் சச்சின் சிவாச் கால்இறுதிக்கு முன்னேறினார்.

பாங்காக்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ எடைபிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 5-0 என்ற கணக்கில் துருக்கி வீரர் படுஹான் சிப்ட்சியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

92 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் சஞ்சீத் குமார் 5-0 என்ற கணக்கில் வெனிசுலாவின் லூயிஸ் சான்செசை விரட்டியடித்து 3-வது சுற்றை எட்டினார். 51 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் மெக்சிகோவின் மவுரிசியோ ரூயிசை தோற்கடித்தார்.

பெண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் 5-0 என்ற கணக்கில் அஜர்பைஜான் வீராங்கனை மசாத்தி ஹம்சயேவாவை வீழ்த்தினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா