ஒவ்வொரு சனிக்கிழமையாக ஒரே நபரை 7 முறை கடித்த பாம்பு….

ஒவ்வொரு சனிக்கிழமையாக ஒரே நபரை 7 முறை கடித்த பாம்பு…. ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி தந்த சம்பவம்

மாதிரி படம்

ஒரே நபரை ஒவ்வொரு சனிக்கிழமையாக பாம்பு 7 முறை கடித்துள்ளது. எதனால் இந்த சம்பவம் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் விகாஸ் துபே. 24 வயதாகும் இவருக்குத்தான் தொடர்ச்சியான பாம்பு தாக்குதல் நடந்துள்ளது. இவரை குறிவைத்து ஒரே பாம்பு 40 நாட்கள் சீரான இடைவெளியில் கடித்துள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக விகாசின் உயிருக்கு பதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஒவ்வொரு முறையும் இவர் பதேபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விளம்பரம்

முன்னதாக இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதற்கு அதிகமான செலவு ஏற்பட்டது. இதையடுத்து, தொடர்ச்சியான பாம்பு தாக்குதல் குறித்து விகாஸ் துபே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் தனக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இவை ஒருபக்கம் இருக்க, ஒவ்வொரு சனிக்கிழமையும் விகாஸ் மீது பாம்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மந்திர தந்திரம் ஏதும் உள்ளதா? இவரை பாம்புகள் பழி வாங்குகின்றனவா? என பொதுமக்கள் பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

விளம்பரம்

இதுகுறித்து தகவல் அறிந்த உயிரின ஆராய்ச்சியாளர்கள் விகாஸ் துபேவுக்கு நடந்துள்ள தொடர் பாம்பு தாக்குதல் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களால், இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க – உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

பாம்பு கடிக்கும்போதெல்லாம் விகாஸ் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதற்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் பாம்பால் கடிக்கப்பட்டு அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விளம்பரம்

இதில் மருத்துவமனை தரப்பில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்தில் விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநோத சம்பவம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி அதன் பக்கத்து மாநிலங்களிலும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
uttar pradesh
,
Viral News

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி