நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திரைப்படம் ஹிட்லர். அதிரடியான ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
மழைபிடிக்காத மனிதன் படத்தைத் தொடர்ந்து இப்படமும் விஜய் ஆண்டனிக்கு தோல்விப்படமாகவே அமைந்தது.
இதையும் படிக்க: இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனா!
இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.