ஓடிடி சினிமா, வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவை எந்த தணிக்கையும் செய்யப்படுவதில்லை. இதனால் நேரடியாக வெளியாகும் இந்த திரைப்படங்களில் ஆபாசக் காட்சிகள் அதிகம் உள்ளன.

இதையும் படிக்க| சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

அதேபோல போதைப்பொருள் பயன்பாடு, வன்முறைக் காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. எனவே, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் என அனைத்தும் தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும்' எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. முதல் விசாரணை முடிவில்,

ஓடிடி திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு தணிக்கை அளிப்பது தொடர்பாக மத்திய தொலைதொடர்பு துறை செயலர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related posts

திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் சில வரிகளில்……