ஓணம் கொண்டாட்டம்: கேரளத்தில் ரூ.818 கோடிக்கு மது விற்பனை- இதுவரை இல்லாத அதிகபட்சம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, மாநில அரசின் மதுக்கடைகளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.818.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, மாநில அரசின் மதுக்கடைகளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.818.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகையில் பூக்கோலம், புத்தாடை, மதிய விருந்தைப் போல மதுவும் முக்கிய அங்கம் வகிப்பதை இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

கேரளத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, நடப்பாண்டு கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி தொடங்கியது.

ஓணம் திருநாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.15) மாநிலத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டன. இதர நாள்களில் கேரள அரசின் மதுபான நிறுவனத்தின் (கேஎஸ்பிசி) கடைகளில் ரூ.818.21 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஹா்ஷிதா அட்டலூரி தெரிவித்தாா்.

முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.809.25 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இப்போது அந்த ‘சாதனை’ முறியடிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிக்கைக்கு முந்தைய நாளான கடந்த சனிக்கிழமையன்று மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அன்றைய தினத்தில் மட்டும் ரூ.704.06 கோடிக்கு மதுபானங்கள் அமோகமாக விற்பனையாகின. இந்த நாளில், கொல்லம் மாவட்டம், ஆஸ்ரமம் பகுதியில் உள்ள மதுக்கடையில் அதிகபட்சமாக ரூ.1.15 கோடிக்கு விற்பனையானது.

கேரள அரசின் மதுபான நிறுவனத்துக்கு அதிக வருவாய் தரும் காலகட்டமாக ஓணம் பண்டிகை உள்ளது. இந்த காலகட்டத்தில் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, மதுபானங்கள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டன; அடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தையொட்டி, விரைவில் இருப்பு அதிகரிக்கப்படும் என்று கேஎஸ்பிசி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!