ஓய்வுபெறுவதற்கு முன்.. கணபதி பூஜையில் மோடி பங்கேற்றது குறித்து பேசிய சந்திரசூட்!

தனது இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது சர்ச்சையான நிலையில் ஓய்வுபெறுவதற்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற சந்திப்புகளின்போது, நீதித் துறை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்படாது என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மாநில முதல்வர்களும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் அவ்வப்போது சந்தித்து பல விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பது நடைமுறையில் உள்ளது என்றார்.

இதையும் படிக்க.. தள்ளுபடி விலையில் கார்கள் விற்பனை!

மேலும், மக்கள் நினைக்கிறார்கள் ஏன் இந்த சந்திப்புகள் என்று. நீதித்துறையின் மீது அரசியல் அமைப்பினரிடையே இருக்கும் மிகுந்த மரியாதையை இந்த சந்திப்பின் மூலம் அறிந்துகொள்ளமுடிந்தது. நீதித் துறைக்கான நிதி அனைத்தும் மாநில அரசிடமிருந்துதான் கிடைக்கிறது. ஆனால், மாநில அரசு ஒதுக்கும் நிதி அனைத்தும் நீதிபதிகளுக்கானது அல்ல. எங்களுக்கு புதிய நீதிமன்ற கட்டடங்கள், மாவட்ட நீதிபதிகள் தங்குவதற்கான இல்லங்கள் வேண்டும். இவற்றுக்கெல்லாம், நீதிமன்ற தலைமை நீதிபதிகளும், முதல்வர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துவது இன்றியமையாதது என்றார்.

நான் முதலில், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தேன். தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதும் நான் முதல்வர் இல்லத்துக்குச் சென்றேன். அதன்பிறகு, எனது இல்லத்துக்கு முதல்வர் வருகை தந்தார். அப்போதுதான், நீதித் துறை தொடர்பாக மாநிலத்தில் எந்தவிதமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன, உள் கட்டமைப்பு என்ன? எவ்வளவு நிதி தேவைப்படும்? எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது. வெறும் கடிதங்கள் மூலமாக மட்டும் பேசினால், எந்த வேலையும் நடந்து முடியாது என்றார்.

இதுபோன்ற சந்திப்புகளின்போது, முதல்வர் எடுத்ததும் நிலுவையில் உள்ள வழக்குகளைப் பற்றி கேட்க மாட்டார். இது அலுவலக நிமித்தமான சந்திப்புகள்தான் என்றும் டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.

கணபதி பூஜையின்போது, டி.ஒய். சந்திரசூட் இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்றது, பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இது நீதித்துறை மீதான சந்தேகத்தை எழுப்பும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறாரா ஜோஷ் இங்லிஷ்?

சென்செக்ஸ் 603 புள்ளிகளுடனும், நிஃப்டி 158 புள்ளிகளுடன் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

அண்ணா தொடர் நடிகருடன் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!