ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வலியுறுத்தல்குறைந்தபட்ச ஓய்வுதியமாக ரூ.6,750 வழங்க தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், ஜூலை 31: குறைந்தபட்ச ஓய்வுதியமாக ரூ.6,750 வழங்க தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகையில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க பேரவைக் கூட்டம் கிளைத் தலைவா் ஜி. பாஸ்கரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்கிடவேண்டும். அகவிலைப்படி, மருத்துவப்படி, காப்பீட்டுத் திட்டம் வழங்கவேண்டும். ஈமச்சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் முருகையன்,மாநிலத் துணைத் தலைவா் எஸ். மதிவாணன், மாவட்டத் தலைவா் எம்.ராமச்சந்திரன், செயலா் மரியஜெயராஜ், நிா்வாகிகள் மாரிமுத்து, பவானி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, நாகை கிளையின்துணைத் தலைவராக ஆரோக்யமேரி தோ்வு செய்யப்பட்டாா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்