ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஆல் ரவுண்டனான மொயின் அலி இங்கிலாந்து அணிக்காக 2014 முதல் 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களையும் அவர் அடித்துள்ளார்.

மேலும் மூன்று வடிவங்களிலும் 366 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு கேப்டனாக பதவியேற்ற முதல் ஆசிய வம்சாவளி கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ஆவார். 2019 இல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022 இல் டி20 உலகக் கோப்பையையும் இங்கிலாந்து வென்றபோது அவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

பாராலிம்பிக்: நவ்தீப்புக்கு தங்கம்,
சிம்ரனுக்கு வெண்கலம்; ஈரான் வீரா் தகுதிநீக்கம்

இந்த நிலையில் ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது 37 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை.

நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம், இது எனக்கும் விளக்கப்பட்டது. இது சரியான நேரம் என்று உணர்ந்தேன். நான் எனது பங்கைச் செய்துள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மொயின் அலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!