கங்கனாவின் ’எமர்ஜென்சி’ – வெளியீட்டுத் தேதி மாற்றம்!

கங்கனாவின் ’எமர்ஜென்சி’ – வெளியீட்டுத் தேதி மாற்றம்!கங்கனா ரணாவத் நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகையும்,எம்.பியுமான கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 6 அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.

அவசரநிலை அறிவிக்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி போஸ்டர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த போஸ்டரைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கங்கனா ரணாவத், அதன் கீழ் ‘சுதந்திர இந்தியாவின் இருண்ட அத்தியாயத்தின் 50-வது ஆண்டின் தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார்.

ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கங்கனா வெற்றிபெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், இதற்கு முன்னர் நடித்தத் திரைப்படங்களின் தொடர் தோல்விகளாலும் இந்தப் படம் வெற்றியடையப் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறார் கங்கனா ரணாவத்.

இதற்கு முன்னர் பலமுறை படத்தின் வெளியீடு தள்ளிப் போனதைத் தொடர்ந்து, தற்போது செப்டம்பர் 6 திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. “இளைஞர்கள் பலரும் நமது நாட்டின் இருண்ட அத்தியாயத்தின் வரலாறு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கங்கனா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி

அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

திருப்பதி லட்டு விவகாரத்திற்காக பரிகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்