கங்கையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; ரயில்கள் ரத்து!

பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளாகவும், சில ரயில்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரின் பல மாவட்டங்களில் கங்கை ஆற்று நீர் அளவுக்கு அதிகமாகப் பாய்வதால், பாகல்பூர் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை. வளாகங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து, தண்ணீரின் அளவு உயர்ந்து வருவதால், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐ-போன் 16 ரகங்களின் முதல் நாள் விற்பனை 25% உயர்வு!

சுல்தான்கஞ்ச் மற்றும் ரத்தன்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் பாலத்தைத் தாண்டி வெள்ள நீர் பாய்வதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஜமால்பூர் – பாகல்பூருக்கு இடையே இயங்கும் ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

பாட்னா-தும்கா எக்ஸ்பிரஸ், சராய்கர் – தியோகர் ஸ்பெஷல், ஜமால்பூர்-கியுல் மெமு ஸ்பெஷல் மற்றும் பாகல்பூர்-தானாபூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் அஜ்மீர்-பகல்பூர் எக்ஸ்பிரஸ், விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், ஹெளரா-கயா எக்ஸ்பிரஸ், சூரத்-பாகல்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விஹார்-மால்டா டவுன் எக்ஸ்பிரஸ் மற்றும் பிரம்மபுத்ரா மெயில் ஆகிய ரயில்கள் திருப்பிவிடப்பட்டள்ளன.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்