“கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக்கொண்டார்” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

“கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக்கொண்டார்” – வாரணாசியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

மோடி

கங்கை மாதா தன்னை மடியில் ஏந்திக்கொண்டதாக வாரணாசியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி முதல்முறையாக சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அவரை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உ.பி., ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின்கீழ் 17-வது தவணையை பிரதமர் மோடி விடுவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகள் பயனடையவுள்ளனர். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “பகவான் காசி விஸ்வநாதரின் ஆசியாலும், கங்கை தாயின் ஆசியாலும், காசி மக்களின் அன்பாலும் நான் மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

விளம்பரம்

#WATCH | Ganga Aarti performed at Dashashwamedh Ghat in Varanasi in the presence of Prime Minister Narendra Modi, Uttar Pradesh Governor Anandiben Patel and Chief Minister Yogi Adityanath. pic.twitter.com/FBZkNrJKe7

— ANI (@ANI) June 18, 2024

விளம்பரம்

உங்களின் நம்பிக்கைதான் எனது மிகப்பெரிய சொத்து. உங்களின் இந்த நம்பிக்கை உங்கள் சேவைக்காக கடுமையாக உழைக்கவும், நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் என்னை ஊக்குவிக்கிறது. இரவும் பகலும் கடுமையாக உழைப்பேன். உங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன். வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண்களாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளை நான் கருதுகிறேன். அவர்களின் அதிகாரத்துடன் எனது மூன்றாவது பதவிக் காலத்தை ஆரம்பித்துள்ளேன்.

விளம்பரம்

விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் தான் இந்தியாவின் மூன்று தூண்கள் என்று பெருமிதம் தெரிவித்தார். மீண்டும் தன்னை வாரணாசியில் வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் மோடி கூறினார்.

இதையும் படிங்க:
பிஸ்கெட் போட்ட சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

வளர்ச்சியின் நகரமாக காசி மாறியிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இறுதியாக ஹரஹர மகாதேவா என்று பாடி தனது உரையை மோடி நிறைவு செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Narendra Modi
,
PM Modi

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?