கஜினி – 2: சூர்யா, அமீர் கான் தயார்?

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 வெளியான திரைப்படம் கஜினி. இதில், நாயகனாக சூர்யாவும் நாயகியாக அசினும் நடித்திருந்தனர்.

காதலிப்பவர்களுக்கு இடையேயான உறவு, மறதிகொண்ட நாயகன் வில்லன்களைப் பலிவாங்கும் காட்சிகள் என பரபரப்பான திருப்பங்களுடன் இப்படம் உருவாகியிருந்தது.

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில் 2008 ஆம் ஆண்டு அமீர் கானை நாயகனாக வைத்து இதே கதையை ஏ. ஆர். முருகதாஸ் ரீமேக் செய்திருந்தார். அங்கும் இப்படம் அட்டகாசமான வெற்றியைப் பெற்று பாலிவுட் பிளாக்பஸ்டரானது.

இதையும் படிக்க: ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சொர்கவாசல் டீசர்!

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹிந்தியில் மது மண்டேனாவும் தமிழில் அல்லு அர்விந்தின் நிறுவனமும் தயாரிக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு கஜினி – 2 படத்திற்கான ஒன்லைன் கதையை அமீர் கான் தயார் செய்ய சொன்னதாகவும் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் தமிழிலும் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Shocking Video: 2 Men Dressed As Sadhus Abused & Thrashed With Slippers In Ayodhya For Allegedly Harassing Women

‘Sirf Game Hai..’: Vivian Dsena’s Shakti-Astitva Ke Ehsas Ki Costar Kamya Punjabi Slams Bigg Boss For Calling Actor ‘Laadla’

Jharkhand Assembly Elections 2024: JMM’s Kalpana Soren, Wife Of CM Hemant Soren files nomination from Gandey Assembly constituency