கடல் நீர்மட்டம் தாழ்வு: கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

குமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில், கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க இருந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 12.00 மணிக்கு பிறகு கடலின் தன்மையைப் பொறுத்து சுற்றுலா படகு சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் கடலில் இறங்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை. தொடர்ந்து 6-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு