கடித்த பாம்பை டப்பாவில் பிடித்து மருத்துவமனைக்கு வந்த நபரால் உ.பி.யில் பரபரப்பு

தன்னை கடித்த பாம்பை பிடித்து டப்பாவில் அடைத்து வந்த நபரால் உத்தர பிரதேச மாநில மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் ஹரிஸ்வரூப் மிஸ்ரா (40). இவரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்டு பதற்றமடையாமல் கடித்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் உயிருடன் அடைத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை: நெல்சன் மறுப்பு

பின்னர் அந்த பாம்புடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் பாம்பை காட்டி, தன்னை பாம்பு கடித்து விட்டதாகவும், அவசரமாக சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஹரிஸ்வரூப்பின் தையரியத்தை கண்டு வியந்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹரிஸ்வரூப், பாம்பு கடித்த இடத்தில் கையைக் காட்டி, கடித்த உடனேயே பாம்பை பிடித்ததாக தெரிவித்தார். இந்த விடியோவை மருத்துவமனை நிர்வாகம் பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தன்னை கடித்த பாம்பை பிடித்து டப்பாவில் அடைத்து வந்த ஹரிஸ்வரூப்பின் தையரித்தை மருத்துவமனையில் இருந்தவர்கள் பாராட்டினர்.

मिश्रा लोगों का अलग एक अलग टशन है। ये हैं लखीमपुर के हरि मिश्रा। इनको सांप ने डस लिया। बस क्या था, मिश्रा जी ने सांप को पकड़ा। एक डिब्बे में बंद किया और पलिया सीएससी पहुँच गए। बोले इसी सांप ने काटा है। मेरा इलाज कर दो।#AmaJaneDo#MishraJipic.twitter.com/xUPFghgvtf

— Naval Kant Sinha | नवल कान्त सिन्हा (@navalkant) August 24, 2024

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!