இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படிக்க : வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா சாதனை வெற்றி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும்.
வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகின்றது. 17 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை நியூசிலாந்து எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடவில்லை.