கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சீமான் சுற்றுப்பயணம்

கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சீமான் சுற்றுப்பயணம்

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 8.19 சதவீத வாக்குகளை பெற்றது. இதன்மூலம் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக விலகிய நிலையில், திமுக, பாஜக கூட்டணிக்கு பிறகு 3-வது பெரிய கட்சியாக போட்டியிட்டது. தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி, அதற்கான களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கட்சி உள்கட்டமைப்பை சீரமைத்து, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யவும், மாவட்ட கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் மாவட்ட வாரியாக கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதற்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்கட்டமாக, நாகப்பட்டினத்தில் கடந்த 24-ம் தேதி நடந்த மாவட்ட கலந்தாய்வில் பங்கேற்றார். அதை தொடர்ந்து, நேற்று பெரம்பலூரிலும், இன்று திருச்சியிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் நிறைவாக நாளை (ஆக.27) தஞ்சாவூரில் நடக்க உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேச உள்ளார்.

Related posts

ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறிய ‘ஆம்லெட்’டில் கரப்பான்பூச்சி

மத்திய பிரதேசம்: பேருந்து மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி

உத்தர பிரதேசம்: ஏ.ஐ. மூலம் ஆசிரியை புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர்கள் கைது