கணவரை இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து செய்த துபை இளவரசி!

கணவரை இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து செய்த துபை இளவரசி!துபை இளவரசி ஷைகா மஹ்ரா கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்ஷைகா மஹ்ரா (கோப்புப் படம்)இன்ஸ்டாகிராம்

துபை இளவரசி தனது கணவரை இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து செய்துள்ளார்.

துபையை ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகள் ஷைகா மஹ்ரா பின்ட் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு கடந்தாண்டு மே மாதத்தில்தான் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுடன் திருமணம் நடந்து, இந்தாண்டு மே மாதத்தில் ஒரு பெண் குழந்தை யும் பிறந்தது.

இந்த நிலையில், இளவரசி ஷைகா மஹ்ரா, அவருடைய கணவரிடம் விவாகரத்து பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஷைகா மஹ்ரா இன்ஸ்டாகிராம் பதிவில் “அன்புள்ள கணவரே, நீங்கள் பிற துணைகளுடனே எப்போதும் சேர்ந்திருப்பதால், நான் இதன் மூலம் நம் விவாகரத்தை அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன், உங்களை விவாகரத்து செய்கிறேன், மேலும் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். _ உங்கள் முன்னாள் மனைவி” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஷைகா மஹ்ரா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் நீக்கியுள்ளனர். அவர்கள் இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் ஒருவரையொருவர் முடக்கியுள்ளனர்.

ஷைகா மஹ்ரா இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருத்துகள் நிலவி வருகிறது.

கணவரை இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து செய்த ஷைகா மஹ்ராவுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் மஹ்ராவின் விவாகரத்து பதிவைக் குறிப்பிட்டு இது வெளிப்படையான, துணிவான முடிவு என பாராட்டி வருகின்றனர்.

'அழகுடன் தங்களைப் போன்ற துணிவான பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளும் ஆண் மிகவும் பாக்கியசாலி' என சிலர் அவரின் மறுமணம் குறித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு ஆண் ஏமாற்ற வேண்டும் என நினைத்தால், எப்படியும் ஏமாற்றுவான். இது அழகு – பணம் – அந்தஸ்து – பொருத்தது அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், பெண்களே, உங்கள் மீது எப்போதும் சந்தேகம் கொள்ளாதீர்கள் என ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த பதிவுகளுக்கு மஹ்ரா தரப்பிலிருந்து எந்த பதிலும் பதிவிடப்படவில்லை.

மஹ்ராவில் இன்ஸ்டாகிராம்வழி விவாகரத்து அறிவிப்பின் பதிவைப் பார்க்கும்போது, பல பெண்களிடையே நேர்மறையான கருத்துகள் எழுந்துள்ளது தெரிகிறது. அதோடு மட்டுமின்றி பல ஆண்களும் இம்முடிவைப் பாராட்டியுள்ளனர்.

எப்போதும் சில எதிர் விளைவுகள் உண்டு என்பதற்கேற்ப, சில எதிர்மறையான கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு