கணவரை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்.. அடுத்து நடந்த பரபரப்பு

கள்ளக்காதலனுடன், இளம்பெண் வெள்ளிச்சந்தை பகுதியில் குடும்பம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

குமரி,

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மஞ்சாடி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் மதுரையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் வாலிபர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இளம்பெண் கணவரிடம் கோபித்துக் கொண்டு மதுரைக்கு சென்றார்.

இதையடுத்து வாலிபர் மதுரைக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு ரெயில் மூலம் அழைத்து வந்தார். ரெயிலில் கணவர் சிறிது நேரம் தூங்கினார். தூக்கத்தில் இருந்து அவர் கண்விழித்து பார்த்தபோது மனைவி, குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நடந்த சம்பவம் பற்றி தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அதில் அந்த பெண் கள்ளக்காதலனுடன் வெள்ளிச்சந்தை பகுதியில் வசித்தது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:-

கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண் நாகர்கோவில் பஸ்நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு வாலிபரை சந்தித்தார். அந்த வாலிபர் நைசாக பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

உடனே அந்த பெண், கணவர் மீதான கோபத்தில் மதுரைக்கு செல்வதாக பதிலளித்துள்ளார். பிறகு இருவரும் சேர்ந்து பஸ்சில் பயணித்தபோது வாலிபர் மனம் உருக பேச, அந்த பேச்சு பெண்ணை கவர்ந்துள்ளது. கள்ளக்காதலனின் பேச்சில் மயங்கிய அந்த பெண், அவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இறங்கினார். பிறகு கள்ளக்காதலனுடன் வெள்ளிச்சந்தை பகுதியில் குடும்பம் நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து கணவர் இருக்கும்போது கள்ளக்காதலனுடன் செல்லக்கூடாது என அந்த பெண்ணை போலீசார் எச்சரித்தனர். குடிகாரன் கூட எப்படி வாழ முடியும் என தன்னுடைய கருத்தை அவர் போலீசாரிடம் தெரிவித்தார். எனினும் நாங்கள் கள்ளக்காதலுக்கு ஒத்துழைக்க முடியாது என கூறி அந்த பெண்ணை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Citroen Launches Aircross Xplorer Limited Edition in India at Rs 8.49 Lakh