கணவர் கொலை: 2 மாதங்களுக்குப் பிறகு மனைவி கைது

கணவர் கொலை: 2 மாதங்களுக்குப் பிறகு மனைவி கைதுஆவடி அருகே தொல்லை கொடுத்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை 2 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.லீமா ரோஸ்மேரி.

ஆவடி: ஆவடி அருகே தொல்லை கொடுத்த கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை 2 மாதங்களுக்கு பிறகு போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை ராணுவக் குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (38). இவர் ஆவடியில் உள்ள ராணுவ வாகனக் கிடங்கில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி லீமா ரோஸ்மேரி (36). இவர் கிண்டியில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த மே மாதம் 10-ஆம் தேதி வேளாங்கண்ணி தாஸ், மது போதையில் படுக்கை அறையில் சுயநினைவின்றி கிடந்ததார் அவரை லீமா ரோஸ்மேரி மீட்டு ஆவடியிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வேளாங்கண்ணி தாஸ் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு, வேளாங்கண்ணி தாஸ் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் வேளாங்கண்ணி தாஸின் உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் வேளாங்கண்ணி தாஸ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் லீமா ரோஸ்மேரியை சனிக்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர் வேளாங்கண்ணி தாஸ் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், அவர் தனது பெற்றோரை அவதூறாகப் பேசியதால், மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, புடவையால் கழுத்தை நெரித்தும், தலையணையை முகத்தில் அமுக்கியும் கணவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றி லீமா ரோஸ்மேரியை கைது செய்து, அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்