கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது – சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற நேரங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை' என தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, 'ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது' என சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

#BREAKING || பக்தர்கள் வைத்த கோரிக்கை.. சிதம்பரம் தீட்சிதர்களுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு#chidambaram#chennaihighcourt#thanthitvpic.twitter.com/5E8LOLRsM0

— Thanthi TV (@ThanthiTV) August 20, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!