கனடா பிரதமருக்கு பாஜக அமைச்சர் கண்டனம்!

கனடா பிரதமருக்கு பாஜக அமைச்சர் கண்டனம்!கச்சேரி நடத்திய இந்தியரை பஞ்சாப் பாடகர் என்று குறிப்பிட்டதற்கு கண்டனம்இந்தியப் பாடகரின் இசைக் கச்சேரியில் கனடா பிரதமர்

இந்தியப் பாடகரை பஞ்சாப் பாடகர் என்று கனடா பிரதமர்அழைத்ததற்கு பாஜக அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பாடகர் தில்ஜித் தோசஞ்ச், கனடாவின் டொரான்டோவில் இசைக் கச்சேரி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பங்கேற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தில்ஜித்தின் இசைக் கச்சேரி நன்றாக இருந்ததாகக் கூறி, ஜஸ்டின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவர் பதிவில் தில்ஜித்தை பஞ்சாப் பாடகர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜஸ்டின் பதிவிட்ட வாழ்த்துப் பதிவில் தில்ஜித்தை இந்தியப் பாடகர் என்று குறிப்பிடாமல், பஞ்சாப் பாடகர் என்று குறிப்பிட்டதற்கு, பாஜக அமைச்சரான மஞ்சிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹா்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று 4 இந்தியர்களைக் கனடா அரசு கைது செய்திருந்தது.

அதுமட்டுமின்றி, இக்கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது இருநாட்டு ராஜீய உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்