கனடா பிரதமர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்!

ஒட்டாவா: இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கனடா மக்களை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு இந்திய அரசு துணை நிற்பதாக கடந்த திங்கள்கிழமை இந்தியா மீது கனடா பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தது இரு நாட்டு உறவுகளில் பெரும்விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ள லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சீன் கேஸே, “கனடா மக்கள் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக விரும்புகிறார்கள்” என்றும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடா தலைமையில் லிபரல் கட்சினரிடையே உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த வாரம், லிபரல் கட்சி எம்.பி.க்கள் பெரும்பாலானோர் ஒன்றுகூடி முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அவற்றில் குறிப்பாக, இந்தியாவுடனான உறவுகள் குறித்தும், லிபரல் கட்சியின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக கருதப்பட்ட டோரண்டோ செயிண்ட் பாலில், கடந்த ஜூனில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:கனடா பிரதமா் குற்றச்சாட்டு: இந்தியா நிராகரிப்பு

முன்னதாக, ‘கனடா மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்துவதுடன் திட்டமிட்ட குற்றங்களில் இந்தியா ஈடுபடுகிறது’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிகாா்: கள்ளச் சாராயத்துக்கு 6 போ் உயிரிழப்பு- 14 போ் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து: வீடு வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பலி; 6 பேர் காயம்

பிரசவ தேதியை நெருங்கும் கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்