கனமழை எச்சரிக்கை; தேசிய பேரிடர் மீட்பு குழு ஊட்டி வருகை

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஊட்டிக்கு வருகை தந்துள்ளனர். பேரிடர் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் இந்த குழுவினருக்காக 2 வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெறும் வரை மீட்பு குழுவினர் நீலகிரியில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!