கனமழை எதிரொலி.. தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தேனி,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரையில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

#BREAKING || கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை#Rain#Theni#weather#Schoolpic.twitter.com/jOEoQPLImD

— Thanthi TV (@ThanthiTV) October 25, 2024

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?