கனமழை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து!

தொடர் கனமழையின் காரணமாக சென்னை ராஜாமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ராஜாஜி நகர் 2வது தெருவில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு இன்று (அக். 16) இடிந்து விழுந்தது.

இதையும் படிக்க | சென்னை, 3 மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அரசு விடுமுறை! அத்தியாவசிய சேவைகள் இயங்கும்!

வீட்டில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக நேற்று காலி செய்துவிட்டுச் சென்றதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

எனினும், இடிந்து விழுந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில், 5 மாத கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் சிக்கிக்கொண்டனர். உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

உடனடியாக விரைந்து செயல்பட்ட ராஜமங்கலம் உதவி ஆய்வாளர் அபிநயா தலைமையிலான காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது