கனமழை: நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது.

நீலகிரி,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 27) விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

#BREAKING || நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆட்சியர் அருணா அறிவிப்பு#Nilgiri#Rain#Tamilnadu#Schoolpic.twitter.com/dRXEsRcB8l

— Thanthi TV (@ThanthiTV) June 27, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!