கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கும் மசோதா நிறுத்திவைப்பு

கன்னடர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கும் மசோதா நிறுத்தி வைப்பு – கர்நாடக அரசு

கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா

கர்நாடகா தொழில் நிறுவனங்களனின் கடும் எதிர்ப்பு காரணமாக கன்னடர்களுக்கே 100 சதவிகித வேலை தர கோரும் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த மசோதாவின் படி, தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் இருக்கும் நிர்வாக பணியிடங்களில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பணியிடங்களில் 75 சதவீத ஊழியர்களைக் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் இந்த புதிய மசோதாவின்படி, கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசித்து, கன்னடத்தில் பேச, எழுத, படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று அம்மாநில அரசு தெளிவுபடுத்தியிருந்தது.

இதையும் படிக்க:
கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா – என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

அதே சமயம், மேல்நிலைப்பள்ளியில் கன்னடத்தை ஒரு பாடமாக படிக்காதவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்படப்பட்டிருந்தது.

தொழிலாளர் துறை அமல்படுத்தும் இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக சட்டம் மீறப்பட்டால், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருந்தன.

விளம்பரம்

தொழில் மையமாக விளங்கும் பெங்களூருவில் இப்படி ஒரு சட்டமா என கேள்வி எழுப்பிய நிறுவனங்கள், தங்களது அதிருப்தியை தெரிவித்தன. இன்ஃபோசிஸின் முன்னாள் CFO மோகன்தாஸ் பாய், கர்நாடக இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீவத்சவா, பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்-ஷா, அசோசேம் இணைத் தலைவர் ஆர்.கே.மிஸ்ரா உள்ளிட்டோர் மசோதாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, தனது எக்ஸ் தள பதிவை முதலமைச்சர் சித்தராமையா நீக்கினார். மேலும் மசோதா குறித்து எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம் அளித்தார்.

விளம்பரம்

இந்நிலையில் தொழில்துறையின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தற்போது வரை மசோதா ஆரம்பக் கட்டத்தில்தான் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மசோதா மீதான இறுதி முடிவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
IT JOBS
,
Jobs
,
Karnataka
,
reservation

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து