கமலுடன் யாரையும் ஒப்பிட முடியாது: பிக் பாஸ் 8 குறித்து ரச்சிதா கருத்து!

நடிகர் கமல் ஹாசனுடன் யாரையும் ஒப்பிட முடியாதுஎன பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் – 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதால், இந்நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்தர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான முன்னோட்ட விடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றது.

கமல் இடத்தில் விஜய்சேதுபதி

இந்நிலையில் பிக் பாஸ் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், கமல்ஹாசனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனக் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகை. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர் கமல். அனுபவம் மற்றும் மிகுந்த அறிவாற்றலால் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவார். அவர் எந்தத் தலைப்பு குறித்தும் உரையாடத் தகுதியுடையவர். அதனால், பார்வையாளர்களை எந்த சூழலிலும் நிகழ்ச்சியில் நிலைநிறுத்தக்கூடியவர். அறிவாற்றலை வெளிப்படுத்துவதில் பிக்காஸோ அவர்.

நடிகர் விஜய் சேதுபதி பழகுவதற்கு இனிமையானவர். பணிவானவர் மற்றும் மிகுந்த நேர்மறையான குணங்களைக் கொண்டவர். இது போட்டியாளர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்த உதவும். ஆனால், கமல்ஹாசனுடன் யாரையும் ஒப்பிட முடியாது. பார்வையாளர்களைக் கவருவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அனைவரையும் போன்று விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். கமல்ஹாசனின் இடத்தில் விஜய் சேதுபதியைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன் என ரச்சிதா மகாலட்சுமி குறிப்பிட்டார்.

படிக்க | பிக் பாஸ் – 8 தொடங்கும் தேதி அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றங்கள்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கெனவே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த முறை செய்த மாற்றங்கள் மக்கள் மனதில் பதிய கொஞ்சம் நாள்களாகும். மேலும், இந்த நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என நான் நினைக்கவில்லை. நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் கடின உழைப்பை நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!