கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார். இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்திற்கும் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டார்.

இது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

Mumbai: BEST Struggles To Meet Demand Of 3.5 Million Daily Passengers As Bus Fleet Shrinks Below 3,000

Navi Mumbai: 55-Year-Old Man Murders Live-In Partner Under Alcohol Influence In Panvel; Accused Previously Served Time For Wife’s Murder

Maharashtra Coastal Zone Authority Directs Raigad Collector To Probe CRZ Violations In Navi Mumbai PMAY Scheme