கமல்ஹாசன் குரலில் மெய்யழகன் பாடல்கள்!

மெய்யழகன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தில், நடிகர் அரவிந்த் சுவாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நிவேதா தாமஸா இது?

படம் செப்.27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இன்று இதன் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், ’நான் போகிறேன்’ மற்றும் ’யாரோ இவன் யாரோ’ எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!