கமல் – 237 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் மெட்ராஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள்.

பின்னர் லோகேஷ் கனகராஜ் படங்களான மாநகரம், கைதி. மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றுள்ளார்கள். தற்போது, அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.

கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்றதுடன் கேஜிஎஃப் – 2 படத்திற்கும் தேசிய விருதை நேற்று (அக். 8) பெற்றனர்.

இதையும் படிக்க: அமிதாப் முதல்வரிசை மாணவர்; ரஜினி கடைசிவரிசை மாணவர்..! வேட்டையன் இயக்குநரின் கருத்து!

இதற்கிடையே, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசனின் 237வது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படம் எப்போது துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கமல் – மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் துவங்கியது. தற்போது, கமல் – 237 படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாகவும் இப்படம் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என அன்பறிவ் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

Proud to add two proven talents in their new avatar as directors for #KH237. Slay it, Masters Anbariv. Welcome to Raaj Kamal Films International again.#ActioninAction@RKFI#Mahendran@anbariv@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/uH07IsMVjd

— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2024

Related posts

UP: BJP Corporator’s Son Marries Pakistan Woman In Online Nikah Ceremony In Jaunpur; Party MLC Attends Function

5 Essential Albums by Indian Guitarists You Need To Hear

Unlock Your Mind : When Chess Meets Visualisation, Math And Logic